த டார்க் நைட் ரைசஸ் படத்துடன் கிறிஸ்டியன் பேய்ல் பேட்மேன் ட்ரெஸ்ஸை கழற்றியதால் அடுத்த பேட்மேனாக நடிகர் பென் அஃப்லெக்கை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆன் லைனில், அவரா பேட்மேன் என்று பேட்மேன் ரசிகர்கள் கதறியது நினைவிருக்கலாம். தற்போது தனது புதிய ரன்னர் ரன்னர் படத்தை புரமோட் செய்வதில் அஃப்லெக் பிஸி.
ரன்னர் ரன்னர் படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகிறது. டுவென்டியன்த் செஞ்சுரி பாக்ஸ் தயாரித்திருக்கும் படத்தை இயக்கியிருப்பது பிராட் ஃபர்மன்.
படத்தின் புரமோஷனின் போது பேட்மேனாக பென் அஃப்லெக் நடிப்பது பற்றி கேட்கப்பட்டது. முக்கியமாக இணையத்தில் அவருக்கு எழுந்த எதிர்ப்பு. இன்னொரு நடிகராக இருந்தால் சீரியஸாகியிருக்கக் கூடும். அந்தளவுக்கு பென் அஃப்லெக்கை ரசிகர்கள் கலாய்த்திருந்தனர்.
பேட்மேனாக ஸ்டுடியோ அவரை ஒப்பந்தம் செய்ததும் அவரிடம் கேட்டுக் கொண்டது, கொஞ்ச நாள் இணையத்தை பார்க்காதீர்கள் என்பதுதானாம். அதற்கு பதிலளித்த அஃப்லெக், ஐ யம் ஏ பிக் பாய் என்று கூறிவிட்டு முதலில் இணையத்தைதான் பார்த்திருக்கிறார். முதல் கமெண்டே, பென் அஃப்லெக்கா பேட்மேன்? நோ என்றிருந்திருக்கிறது.
படு காமெடியாகதான் இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டார் பென் அஃப்லெக். பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் அதிருப்தி ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிடுவார் என்றுதான் தோன்றுகிறது.


0 comments:
Post a Comment