அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தில் அர்னால்ட் வில்லனாக நடிக்கக் கூடும் என புதிய செய்தி வெளியாகியுள்ளது.
அவதாரின் இரண்டு, மூன்று, நான்கு பாகங்களை அடுத்த வருடம் முதல் படமாக்குகிறார் nஜம்ஸ் கேமரூன். தற்போது திரைக்கதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அவதாரின் இரண்டாவது பாகத்தில் வில்லனாக நடிக்கக்கூடும் என்று ஹாலிவுட்டில் ஒரு தகவல் உள்ளது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.
அர்னால்ட் ஜேம்ஸ் கேமரூனின் விருப்ப நடிகர்களில் ஒருவர். டெர்மினேட்டர், டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே, ட்ரூ லைஸ் போன்ற ஜேம்ஸ் கேமரூனின் படங்களில் அர்னால்ட்தான் ஹீரோ.
அர்னால்டுக்கு இப்போது 66 வயதாகிறது. தாத்தா ஆனபிறகும் அவரின் ஆக்சன் போகவில்லை. விரைவில் டெர்மினேட்டர் 5, எக்ஸ்பென்டபிள்ஸ் 3, எஸ்கேப் பிளான் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார். எக்ஸ்பென்டபிள்ஸ் படத்தில் அர்னால்டைப் போன்று பல தாத்தாக்கள் - சில்வஸ்டர் ஸ்டாலோன், ஹாரிஸன் ஃபோர்ட் (இவருக்கு வயது 71) நடிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment