Thursday, 19 September 2013

மீண்டும் பாக்ஸ் ஆபிஸை திணறடித்த ஜேம்ஸ் வான்


சில மாதங்கள் முன்புதான் ஜேம்ஸ் வானின் த கன்ஜு‌ரிங் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை கலக்கியது. சென்ற வாரம் அவ‌ரின் இன்சைடியஸ் - சேப்டர் 2 ஹாரர் படம் வெளியானது. இப்போதுதான் வானின் மாஸ்டர் பீஸான த கன்ஜு‌ரிங் வெளியாகியிருக்கிறது. அதற்குள் இன்னொரு படம் என்றால் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என்று ஒரு பி‌ரிவு கூறியது.

த கன்ஜு‌ரிங் படம் பிடித்ததால் ஜேம்ஸ் வான் புதிய படத்தில் என்ன காட்டியிருக்கிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் திரையரங்குக்கு வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்தது தயா‌ரிப்பு தரப்பு. பாக்ஸ் ஆபிஸ் ‌ரிசல்டில் தயா‌ரிப்பு தரப்புக்குதான் வெற்றி.

வெறும் 5 மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 3,049 திரையரங்குகளில் வெளியாகி மூன்றே தினங்களில் 40.3 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. த கன்ஜு‌ரிங் வசூலுடன் ஒப்பிட்டால் ஜஸ்ட் ஒரு மில்லியனுக்குள்தான் வித்தியாசம்.

இவ்வளவு அதிக வசூலை யாரும் எதிர்பார்க்கவில்லை. வெள்ளிக்கிழமை வசூலை வைத்து 30 முதல் 35 மில்லியன் டாலர்களை வசூலிக்கும் என்றுதான் கணக்குப் போட்டனர்.

ஜேம்ஸ் வானின் படமும் அனைத்துக் கணக்கையும் காலி செய்துள்ளது.

0 comments:

Post a Comment