Thursday, 19 September 2013

பெண் ஊழியரிடம் சில்மிஷம்; Delhi Highcourt சூப்பர் தீர்ப்பு



பெண் ஊழியரை சில்மிஷம் செய்த வழக்கில் ஒரு பள்ளியின் வகுப்பறைகளுக்கு ஓராண்டுக்கு தேவையான வாசனை திரவியங்கள் மற்றும் தேவையான பொருட்களை வாங்கித்தரவேண்டும் என்று தொழிலதிபருக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனை அளித்தார்.

டெல்லி ஆர்கே புரத்தில் வசித்து வரும் பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளன) மீனா. குர்கானை சேர்ந்தவர் தீபக். தொழிலதிபர். குர்கானில் உள்ள இவரது நிறுவனத்தில் மீனா, கடந்த 2012 டிசம்பர் முதல் வேலை செய்து வந்தார். தீபக் அடிக்கடி தவறாக நடந்துகொள்ள முயன்றதை தொடர்ந்து மீனா 2013 மார்ச் மாதம் அந்நிறுவனத்தில் இருந்து நின்றுவிட்டார்.

இதையடுத்து மீனா வேறொரு நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.இந்நிலையில் கடந்த ஜூன் 29ம் தேதி வீட்டில் மீனா தனியாக இருந்த நேரம் பார்த்து தீபக் வந்தார். மீனாவின் ஆடைகளை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தார்.

மீனாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதைக்கண்ட தீபக் அங்கிருந்து தப்பியோடினார். இதுபற்றி மீனா போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், தீபக்கை கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி விசாரித்து வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது:மீனா வீட்டில் தனியாக இருந்தபோது, தீபக் அத்துமீறி உள்ளே நுழைந்து மீனாவை , சில்மிஷம் செய்திருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செயல் செய்ததற்கு நீதிமன்றத்தில் அவர் மன்னிப்பு கடிதமும், வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.6 லட்சம் நிவாரண தொகை தருவதாக தீபக், நீதிமன்றத்துக்கு வெளியே ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சமரசம் எற்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் செய்த குற்றத்துக்காக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அந்த தொகையை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்களுக்கான நூலகம் மற்றும் டெல்லி போலீஸ் நலவாழ்வு சங்கத்துக்கு பிரித்து தரவேண்டும். இதுமட்டும் அல்லாது, ஒரு பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான அறைவாசனை திரவியங்கள் மற்றும் தேவையான பொருட்களை தீபக் வாங்கித்தர வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

0 comments:

Post a Comment