அழகுராஜா, பிரியாணி படங்களைத் தொடர்ந்து அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்படாமல் இருந்தது. தற்போது காளி என்று பெயரிட்டுள்ளனர்.
காளி ரஜினி நடித்த படத்தின் பெயர். கார்த்தி, ரஞ்சித் இணையும் படத்துக்கு ரஜினி நடித்தப் படத்தின் பெயரை வைக்கப்போகிறார்கள் என்று சில வாரங்கள் முன்பே கூறப்பட்டது. காளி என்று பெயர் வைக்கப்பட்டதன் மூலம் அது உண்மையாகியிருக்கிறது.
காளியில் கத்ரினா தெரசா நாயகியாக அறிமுகப்படுத்தப்படுகிறார். வட சென்னையை களமாகக் கொண்டு படம் உருவாகிறது. அட்டகத்தியில் அறிமுகமான சந்தோஷ் நாராயணன் இசையமைக்க நாசர், பாலாசிங் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் காளியை தயாரிக்கிறது.


0 comments:
Post a Comment