ஹரியானா மாநிலத்தில் குடும்ப எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட இளம் ஜோடிகளை கொன்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 20 வயது பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார் அவரது 23 வயது காதலனின் தலை வெட்டப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்ட உடல் அவரின் வீட்டின் முன் வீசியெறியப்பட்டிருந்தது.
அந்தப் பெண்ணின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் ரொத்தக் பகுதியை சேர்ந்த நிதி என்ற பெண்ணும், தர்மேந்தர் என்ற ஆணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த ஜோடிகள் சாதி மாறி திருமணம் செய்து கொள்ள முயன்றதால் இந்த எதிர்ப்பு என்று கூறப்படுகிறது.
இந்த எதிர்ப்பை அடுத்து அந்த ஜோடிகள் டெல்லிக்கு தப்பியொடிவிட்டனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அவர்கள் பாதுகாப்பாக இருக்க அனுமதிக்கப்படுவர் என்று உறுதி மொழி தந்ததால் சொந்த ஊருக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த இந்த ஜோடிகள், தனியே வாழ வேண்டாம், குடும்பத்தில் சேர்ந்து இருக்கலாம் என்று ஏமாற்றியுள்ளனர். இதனிடையே நேற்று தர்மேந்தர் பாரக்கின் கை, கால்களை தனித்தனியே வெட்டி பின்னர் தலையை வெட்டி வீசிய நிதியின் அப்பா, தலையை தர்மேந்தர் வீட்டின் வெளியே தூக்கி எறிந்துள்ளார்.
இதனை அடுத்து தன் மகள் நிதி பாரக்கை கொன்று அந்த குடும்பமே எரித்து ஒரு கொளரவ கொலையை நிகழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


0 comments:
Post a Comment