Monday, 23 September 2013

கருணை உள்ளம் நெ.2



சீரியல் வரிசைக்காக 2 என்று போட்டாலும் சில விஷயங்களில் தளபதியும் நெ. 1 தான். குறிப்பாக நாம் சொல்லப் போகிற இந்த விஷயம். லயன் 2 படத்தின் சண்டைக் காட்சியில் ஒரு சண்டைக் கலைஞருக்கு அடிபட்டிருக்கிறது.

அவரை மருத்துவமனையில் அனுமதித்ததோடு இயக்குனரும், பிரகாச ஹீரோவும் அவரை மறந்துவிட்டனர். மருத்துவச் செலவுகளுக்கு அந்தக் குடும்பம் அல்லாடியிருக்கிறது. இயக்குனரையும், ஹீரோவையும் தொடர்பு கொண்ட போது, எந்த உதவியும் செய்ய முடியாது என்றிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஸ்டண்ட் நடிகர் மருத்துவச் சிகிச்சைக்கே திண்டாடுவது தளபதியின் காதுக்கு வந்திருக்கிறது. உடனே தேவையான அளவு பண உதவி செய்திருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களுக்கு அப்போதாவது சொரணை வருமா என்று பார்க்கதான் நூற்றாண்டு விழா பேச்சில் ஸ்டண்ட் நடிகர்களின் அர்ப்பணிப்பு பற்றி தளபதி குறிப்பிட்டாராம்.

0 comments:

Post a Comment