பல புதிய தொழில் நுட்ப சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டு இரண்டு புதிய வண்ணங்களில் போர்ட் பிகோ ஹாட்ச் பேக் கார் வெளியிடப்பட்டுள்ளது.
போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிலையங்களில் ஒன்று. போர்ட் நிறுவனத்தின் மிகவும் கவர்ச்சியான, எல்லாருடைய மனங்களையும் கவர்ந்த ஹாட்ச் பேக் வாகனம் போர்ட் பிகோ முதன் முதலில், 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிகோ, அவ்வப்போது சிற்சில மேம்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
20 இந்திய வாகனத்துறை பரிசுகளை தட்டிச் சென்ற, இந்த வெற்றிகர ஹேட்ச்பேக் மாடல், இந்த ஆண்டு துவக்கத்தில், நிறைய மாறுதல்களுடன் வெளிவந்தது. இரண்டு புதிய நிறங்களான 'ப்ரைட் பெல்லோ' மற்றும் 'கைனடிக் ப்ளூ' நிறங்களை, மேம்படுத்தப்பட்ட இம்மாடலில் அறிமுகப்படுத்தியது. வெளி மற்றும் உள் அமைப்புகளில், புதுப்பொலிவுடன் வந்த பிகோ, பல புதிய தொழில் நுட்ப சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
கவர்ச்சியான தோற்றத்திற்கு, இலக்கணம் வகுப்பது போன்ற இதன் ஸ்டைலுக்கு, காரணங்கள் முன்புற க்ரோம் க்ரில், அகன்ற கண்களைப் போன்ற ஹெட்லைட், மெல்லிய நீண்ட டெயில் லேம்ப், புதிய அலாய் வீல்கள், அறுகோண ரேடியேட்டர் க்ரில் போன்றவைகளாகும். சற்றே முன்புறம் சரிந்த கூரை, மிகப்பெரிய வீன்ட் ஷீல்ட் செதுக்கியது போன்ற பக்கங்கள் ஆகியன கம்பீரமான அழகாகும்.
இதன் ப்ளூடூத் கனெட்டிவிட்டியினால், மொபைல் போனை, ஆடியோ சிஸ்டத்துடன் இணைத்து பிறருடன் தொடர்பு கொள்ளலாம். இதன் ட்யூராடெக் பெட்ரோல் இன்ஜினும், ட்யூராடார் டீசல் இன்ஜினும் துரிதமான, அதே நேரம் சிறந்த கட்டுப்பாட்டுடனான செயல்திறனை வழங்குகிறது. சிறப்பாக ஸ்டியரிங் கட்டுப்பாடு, முழுமையான சஸ்பென்ஷன் வழங்கும் சுகமான பயணம் போன்றவை, வாகன ஓட்டும் அனுபவத்தை சிறப்பாக்குகிறது.
நீண்ட தூர சாலைப் பயணமோ, நீண்ட கால விடுமுறைப் பயணமோ, 284 லி., பூட் ஸ்பேஸ் தாராள இடவசதியை அமர்வதற்கும், பொருட்கள் எடுத்து செல்வதற்கும் உதவுகிறது. பின்புற இருக்கைகள் மடித்துக் கொள்ளக் கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆடியோ கன்ட்ரோல் கொண்ட ஸ்டிரிங் காலம், இரண்டு மடங்கு அதிக வேகத்தில் குளிர்ச்சியை அளிக்கும் எக்ஸ்ட்ரா - லார்ஜ், கம்ப்ரெஸ்ஸர் கொண்ட, 'ஏசி' இ.பி.டி.யுடன் இணைந்த ஏ.பி.எஸ். ப்ரேக்கிங் சிஸ்டம், இரண்டு முன்புற ஏர் பேக்கன் போன்றவை, வசதியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறது. பின்புறம் மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையை, எப்படி வேண்டுமானாலும் மடித்துக் கொள்ளக் கூடிய வசதி, பிகோவின் தனிப்பட்ட சிறப்பு அம்சமாகும்.
பிகோவின் பெட்ரோல் மாடல்கள் ட்ரோடெக் பெட்ரோ எல்.எக்ஸ்.ஐ., இ.எக்ஸ்.ஐ., இசட்.எக்ஸ்.ஐ., மற்றும் டைட்டேனியம் ஆகும். இதன் டீசல் மாடல்கள் ட்யூரோடார்க் டீசல் எல்.எக்ஸ்.ஐ., இ.எக்ஸ்.ஐ., இசட்.எக்ஸ்.ஐ., மற்றும் டைட்டேனியம் ஆகும்.
பிகோ ப்ரைட் யெல்லோ, சில் மெட்டாலிக், கொலரேமே ரெட், மூன்டஸ்ட் சில்வர், டயமண்ட் வொய்ட், பான்தர் ப்ளாக் சீக்ரே, கைனடிக் ப்ளூஎன்ற, எட்டு கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கிறது. போர்ட் பிகோ மொத்தத்தில் மதிப்பு மிகுந்த ப்ராண்ட் ஸ்டைலுடன் இணைந்து, சிறந்த செயல் திறன் நகரச் சாலைகளுக்கு ஏற்ற, சிறந்த பிக் அப் மற்றும் லேசான க்ளட்ச் சிறந்த ட்ரான்ஸ்மிஷன், ஸ்திரமான பாடி கன்ட்ரோல், அதிக இடவசதி, அதன் அம்சங்களுக்கு ஏற்ற நியாயமான விலை என்று, பிகோ அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.


0 comments:
Post a Comment