நஸ்ரியா நசீம் இப்போது தென்னிந்தியாவின் ஹாட் கேக். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் அதிகம் விரும்பி ஒப்பந்தம் செய்யப்படுகிற நடிகை. நயன்தாராவை வைத்து படம் பண்ணும் ஆசை உள்ளவர்கள் இப்போது நஸ்ரியாவைதான் நாடிச் செல்கின்றனர். நயன்தாராவுக்கு நீங்க போட்டியா என்று ஆந்திராவில் கேட்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகையான நஸ்ரியாவுக்கு ஒரு நீண்ட நாள் ஆசை. சினிமாவில் பாட வேண்டும்.
ஆசைப்படுகிற அளவுக்கு அவருக்கு தேன் குரல். ரகசிய ஆசையாக இருந்ததை இப்போதுதான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதைக் கேட்ட பல இசையமைப்பாளர்களுக்கு ஆச்சரியம்.
நய்யாண்டியில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். நஸ்ரியாவின் இந்த ஆசை தெரிந்திருந்தால் அவருக்கும் பாடுகிற வாய்ப்பு கிடைத்திருக்கும். அதனால் என்ன. நடிகைகளின் குரல்வளத்தை வெளியே கொண்டு வருவதையே தனது கடமையாகக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் விரைவில் நஸ்ரியாவுக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாக கூறுகிறார்கள்.
ம்...ஆண்ட்ரியாவுக்கும் போட்டி வந்திடுச்சி.


0 comments:
Post a Comment