ரத்த சரித்திரம் படத்தில் ஹோம்லியாக நடித்த ராதிகா ஆப்தே அப்படியொன்றும் ஹோம்லியான ஆள் கிடையாது. வெளிநாட்டு இசைக்கலைஞரை காதலித்து வருகிறவர்.
விரைவில் அவரை திருமணம்.... செய்வார் என்றுதானே நினைக்கிறீர்கள்? திருமணம் செய்யலாம், செய்யாமலும் போகலாம் என்பதுதான் ராதிகா ஆப்தேயின் நிலைப்பாடு.
தோனியில் நடித்தவர் அடுத்து வெற்றிசெல்வன் படத்தில் அஜ்மல் ஜோடியானார். படம் முடிந்தும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில்தான் அழகுராஜா படத்தில் முக்கிய திருப்புமுனை கேரக்டரில் அவரை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.
கார்த்தி, சந்தானம் நடித்திருக்கும் அழகுராஜாவை பொறுத்தவரை அழகுராணி ஹீரோயின் காஜல் அகர்வால் மட்டுமில்லை, ராதிகா ஆப்தேயும்தான்.


0 comments:
Post a Comment