ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் படங்களின் ஆடியோ உரிமையை சோனி மியூஸிக்தான் தொடர்ந்து வாங்கி வருகிறது. இது கதிர்வேலன் காதல் படத்தின் ஆடியோ உரிமையையும் சோனி மியூஸிக் வாங்கியுள்ளது.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படம், இது கதிர்வேலன் காதல். நயன்தாரா உதயநிதியின் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை சுந்தரபாண்டியன் பிரபாகரன் இயக்கியுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி போலவே இசை, ஹாரிஸ் ஜெயராஜ்.
அக்டோபர் 11ஆம் தேதி வணக்கம் சென்னையுடன் இது கதிர்வேலன் காதலின் டீஸரை வெளியிடுகிறார்கள். அடுத்த மாதமே ஆடியோ வெளியீட்டு விழா. நவம்பரில் படம் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து நண்பேன்டா படத்தில் உதயநிதி நடிக்கிறார்.


0 comments:
Post a Comment