Monday, 23 September 2013

இஸ்லாமியர்களை தவிர்த்து விட்டு துப்பாக்கி சூடு; 68 பேர் பலி



கென்யாவில் வணிக வளாகத்தை தன் வசப்படுத்திய சோமாலிய தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் இதில் பரிதாபமாக பலியானார். கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று முன்தினம் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

முதலில் 20 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. காயமடைந்த சிலர் இறந்ததாலும் உடல்கள் மேலும் மீட்கப்பட்டதை தொடர்ந்தும் பலி எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.
இதில் இந்தியாவை சேர்ந்த ஸ்ரீதர் நடராஜன் (40) பரம்ஷு ஜெயின் என்ற 8 வயது சிறுவனும் இறந்தது தெரியவந்தது. மருந்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ஸ்ரீதர் நடராஜன் தமிழகத்தை சேர்ந்தவர். மேலும், துப்பாக்கி சூட்டில் இந்தியர்கள் 4 பேர் உட்பட 300 பேர் காயமடைந்தனர்.

அதிபர் மகனும் பலி;

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தனது குடும்ப உறுப்பினர்களும் இறந்ததாக கென்யா அதிபர் உஹுரு கென்யத்தா தனது தொலைக்காட்சி உரையில் உருக்கத்துடன் தெரிவித்தார்.

200 பேர் பிணைக் கைதிகள்..
துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகள் 200 பேரை அந்த வணிக வளாகத்துக்குள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மூன்று நாட்களாக அங்கு ராணுவத்தினர் பொதுமக்களை மீட்க போராடி வருகின்றனர்.

0 comments:

Post a Comment