Monday, 23 September 2013

டிஜிட்டலில் வெளியாகும் அன்பே சிவம்


ஜான் ஹக்ஸ் இயக்கத்தில் 1987 ல் வெளியான பிளேன்ஸ், ட்ரெய்ன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ் படத்தின் பாதிப்பில் கமல் எடுத்த படம் அன்பே சிவம். படத்தை இயக்கியவர் என்று சுந்தர் சி. யின் பெயர் போட்டு இந்தப் படம் வெளியானது.

கமலின் படங்களில் மிகச்சிறந்த படம் அன்பே சிவம் என சொல்பவர்கள் உண்டு. அன்புதான் அனைத்தும் என்பதை தெளிவாக உணர்த்திய படம். மாதவன், கிரண், கார்ட்டூனிஸ்ட் மதன் ஆகியோர் நடித்திருந்தனர். முதன் இந்தப் படத்தின் வசனத்தை எழுதியிருந்தார். சுனாமி பற்றி (தமிழில்) இந்தப் படத்தில்தான் முதல்முறையாக குறிப்பிடப்பட்டிருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு படம் வெளியான போது குறைவான வசூலையே பெற்றது. அப்போதைய ரசிப்புத்தன்மை அப்படி.

இன்று படத்தை வெளியிட்டால் படம் அனைவரையும் கவரும் என படத்தை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் முரளிதரன் நம்புகிறார். பலர் தொலைபேசியிலும், கடிதத்திலும் அன்பே சிவத்தை மீண்டும் திரையிடும்படி கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக டிஜிட்டலில் படத்தின் ஒலியின் தரத்தை மேம்படுத்தி வெளியிட அவர் தயாராக இருக்கிறார். கமலின் அனுமதி மட்டும் வேண்டும். காரணம் தயாரித்தது லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்றhலும் வெளியிட்டது கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ்.

விரைவில் கமலின் நினைத்தாலே இனிக்கும் படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து அன்பே சிவத்தை வெளியிட முரளிதரன் தீர்மானித்துள்ளார். கமலின் அனுமதியில் இருக்கிறது அன்பே சிவத்தில் மறு வெளியீடு.

0 comments:

Post a Comment