ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் அவரது தங்கையை கொலை செய்ய கூலி படையினருக்கு அளித்த பணம் அவரையே பலிவாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஸாவின் அங்குல் பகுதியை சேர்ந்தவர் சமர் தாஸ், இவருக்கு வயது 30.
சொந்தமாக தொழில் செய்துவந்த இவர் சொந்த அண்ணனை திருமணம் செய்துகொண்டு குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திய இவரது தங்கை நமிதாவை கொலை செய்ய கூலி படையை சேர்ந்த 4 பேரிடம் 3 லட்சம் ரூபாய்க்கு பேரம் செய்தார்.
இவர்கள் நால்வரும் பலமுறை முயற்சித்த பின்னரும், நமிதாவை கொலைச் செய்ய இயலவில்லை. இதனால், சமரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தப்பிக்க எண்ணிய அக்கும்பல், தாங்கள் நமிதாவை கொன்றுவிட்டதாகவும், பணத்தை எடுத்துக்கொண்டு வரும்படியும் சமருக்கு தகவல் அளித்தனர்.
கூலி படையினரை பார்க்க ஒன்றரை லட்சம் பணத்துடன் சென்ற சமர் மீதி பணத்தை பின்னர் தருவதாக தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கூலி படையினர், சமரை அடித்து கொலைசெய்துவிட்டு தப்பினர்.
செப்டம்பர் 7 ஆம் தேதி நடந்த இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்துள்ள போலீசார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.


0 comments:
Post a Comment