Monday, 23 September 2013

தங்க நிற ஐ ஃபோன்! வெளியான சில நேரத்தில் விற்று தீர்ந்தது


ஆப்பிள் நிறுவனம் நேற்று பெரியதான அறிவிப்புகள் ஏதும் இன்றி தங்கத்திலான மாடல் ஐ ஃபோன் ஒன்றை வெளியிட்டது. வெளியிட்ட சில மணி நேரத்தில் நியூயார்க ஷோரூமில் 1400 பேர் அள்ளிச்சென்றனர்.

5S மற்றும் மலிவு விலை என்று கூறி 5c மாடல் மொபைல்களை சமீபத்தில் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், திடீரென தங்கம் மாடலில் நேற்று மொபைலை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கியூவில் நின்ற பாதி பேருக்கு மொபைல் ஃபோன் கிடைக்கவில்லை. அவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இதையும் இந்தியா, சீனாவில் தங்கம் மோகம் அதிகம் என்பதால் அங்கு சந்தையை பிடிக்க சரியான வழி என்று
ஆப்பிள் நிறுவனம் இப்படி திடீர் இன்ப அதிர்ச்சி தந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தங்கம் மாடல் போனில் மேல் தகடு மட்டும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேல் தகடு 24 கேராட் தங்கம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் நியூ யார்க்கில் அறிமுகமான இந்த மொபைலுக்கு காத்திருந்தோர் அந்த ஐ ஃபோன் குறித்து எந்த தகவலும் இல்லாமல் கூடினர் என்பது ஐ ஃபோன் மோகத்தின் உச்சம்.

0 comments:

Post a Comment