Monday, 23 September 2013

மிடில் ஆர்டர் சபலம் கூடாது-சேவாகிற்கு சாப்பல் அறிவுரை!



துவக்க வீரராக உலக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த விரேந்திர சேவாக், மிடில் ஆர்டரில் களமிறங்க விருப்பம் தெரிவித்ததாக எழுந்த செய்திகளையடுத்து ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் மேதை இயன் சாப்பல் சேவாக் அந்த சபலத்தை விட்டுவிடவேன்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.


இது குறித்து பிரபல கிரிக்கெட் இணையதளத்தில் அவர் எழுதிய சிறப்புப் பத்தியில் கூறியிருப்பதாவது:
ஒருமுறை சேவாக் ஆஸ்ட்ரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னரிடம் கூறியபோது டெஸ்ட் போட்டிகளில் துவக்கத்தில் பீல்ட் நெருக்கமாக இருக்கும் சமயத்தில் ஷாட்களை ஆட நிறைய பீல்டில் இடைவெளிகள் இருக்கும் என்று கூறினார்.

எனவே அவரது அட்வைசை அவரே மீறும் வகையில் மிடில் ஆர்டரில் இறங்க அவர் ஆசைபடக்கூடாது.

மேலும் மிடில் ஆர்டரில் இறங்கும்போது இன்னிங்ஸின் ரிதம் ஏற்கனவே செட் செய்யப்பட்டிருக்கும். மேலும் சில விக்கெட்டுகள் விழுந்துள்ள நிலையில் எந்த ஒரு பேட்ஸ்மெனும் தனது ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தியே ஆகவேண்டிய நிலை இருக்கும்.

பவுலர்களுடன் சரிசமமாக இவர் துவங்க முடியாமல் போகும். ஸ்பின்னர்களை சேவாக் அடித்து நொறுக்கியதை நினைத்துப் பார்க்கவேண்டும், துவக்கத்தில் களமிறங்கி நன்றாக செட்டில் ஆன பிறகு பல ஸ்பின்னர்களை கிராண்ட் ஸ்டாண்டிற்கு வெளியே துரத்தி அடித்திருக்கிறார். துவக்க வீச்சாளர்களை அடித்து நொறுக்கி 60 அல்லது 70ரன்கள் எடுத்துக் கொடுப்பதுதான் அவரது சிறப்பு.

மாறாக மிடில் ஆர்டரில் களமிறங்கி ஒரு டெஸ்ட் லெவல் ஸ்பின்னரை சபலத்துடன் அடிக்கப் போய் இவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வந்தால் அது அணித் தேர்வுக்குழுவின் பொறுமையை சோதிக்கும் சமாசாரமாகிவிடும்.

மேலும் எந்த ஒரு வீரரும் தனது டவுன் ஆர்டரை மாற்றி கீழே களமிறங்குவது அவரது தன்னம்பிக்கையின் பலவீனத்தை எடுத்துரைப்பதாக அமையும். ரிக்கி பாண்டிங் இந்தத் தவறை தனது கடைசி காலத்தில் செய்தார். 3ஆம் நிலையில் களமிறங்கிய அவர் 4ஆம் நிலைக்கு வந்தார். ஆனால் ஒரு ஆதிக்க பேட்ஸ்மென் இவ்வாறு கீழே இறங்குவது எதிரணியினருக்கு பலவீனத்தை படம் பிடித்து காட்டுவதற்குச் சமமாகும்.

பாண்டிங் போலவே சேவாகும் டவுன் ஆர்டரை மாற்றினால் காயமடைந்த புலியின் ரத்த வாடையை மற்ற விலங்குகள் முகர்ந்து வேட்டையாட வசதியாகப் போய்விடும்.

இந்த விஷயத்தில் சச்சின் டெண்டுல்கரை...
பாராட்டவேண்டும் கடைசி வரை 4ஆம் நிலையை விட்டு அவர் இறங்கவே மாட்டார்.

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகு சேவாகை அந்த இடத்திற்குக் கொண்டு வருவது இந்திய அணியைப் பொறுத்தவரை சரியான தேர்வாக இருக்கலாம்.

ஆனால் ஏற்கனவே நிறைய இளம் வீரர்கள் தங்கள் முத்திரையை பதிவு செய்து விட்ட நிஅலியில் 40 வயது வீரர் ஓவ்யு பெறும் இடத்தில் 35 வயது வீரர் ஒருவரை அந்த இடத்தில் இறங்கச் செய்வது முன்னேற்றத்திற்கான அடுத்த படியாக இருக்கமுடியாது.

இவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்.

0 comments:

Post a Comment