பெண்களுக்கு ஏற்படும் கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒன்று தான் கூந்தல் வறட்சி.
ஆனால் இத்தகைய கூந்தல் வறட்சியானது சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மருந்துகள் கலக்கப்பட்ட தண்ணீரினால் ஏற்படுகிறது என்றால், அப்போது கூந்தலுக்கு அதிக பராமரிப்பு கொடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால், அத்தகைய கூந்தல் வறட்சியினால் கூந்தல் உதிர்தல், கூந்தல் உடைதல் மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
ஆகவே கூந்தல் வறட்சியை தவிர்த்து, கூந்தலை மென்மையாக வைத்துக் கொள்ள ஒருசில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்.
இவற்றால் கூந்தல் வறட்சி நீங்குவதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக, பொலிவோடு இருக்கும்.
மேலும் இத்தகைய விஷயங்கள் அனைத்தும் மிகவும் எளிமையானவை.
இப்போது கூந்தல் வறட்சியைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் கொடுத்துள்ளோம்.
அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், நிச்சயம் கூந்தல் வறட்சியைப் போக்கலாம்.
சீகைக்காய் கூந்தலை வறட்சியின்றி பட்டுப்போன்று வைத்துக் கொள்ள வேண்டுமெனில், ஷாம்புவிற்கு பதிலாக சீகைக்காய் போட்டு குளிர்க்க வேண்டும். இதனால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும்.
வெங்காயம் ஸ்கால்ப்பில் எந்த பிரச்சனையும் வராமல், கூந்தல் நன்கு அடர்த்தியாக வளர்வதற்கு, வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை ஸ்கால்ப்பில் படும் படி மசாஜ் செய்து வர வேண்டும்.
சீப்பை தவிர்க்கவும் நீளமான கூந்தல் கொண்டவர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் முடி வெடிப்பு. இத்தகைய முடி வெப்பானது கூந்தல் வறட்சியால் தான் ஏற்படுகிறது.
எனவே இதனை தவிர்க்க, ஈரமாக இருக்கும் போது தலைக்கு சீப்பைப் பயன்படுத்தக்கூடாது. இதனால் கூந்தல் உதிர்வதுடன், முடி வெடிப்புக்களும் ஏற்படும்.
தக்காளி சாறு மென்மையிழந்து வறட்சியாக காணப்படும் கூந்தலை, மென்மையாக மாற்றுவதற்கு தக்காளி சாற்றினைக் கொண்டு தலையை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ஹேர் பேக் ஹேர் பேக்குகளில் நிறைய உள்ளன. அதில் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ரோஜா இதழ்களைக் கொண்டு செய்யப்படும் ஹேர் பேக்குகளை பயன்படுத்தினால், கூந்தல் ஆரோக்கியமாக வறட்சியின்றி இருக்கும்.
பாதாம் பேஸ்ட் பாதாம் பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்தால், வறட்சியினால் பொலிவிழந்து காணப்படும் கூந்தலை பொலிவோடும், பட்டுப் போன்றும் வைத்துக் கொள்ளலாம்.
ஈரமான துண்டு தலைக்கு சுடுநீரில் நனைத்து பிழந்த துண்டை தலையில் கட்டி 10 நிமிடம் உற வைக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், வறட்சியைத் தவிர்க்கலாம்.
பால் கூந்தல் வறட்சியை தவிர்த்து, அதனை மென்மையாக வைப்பதற்கு, வாரத்திற்கு ஒரு முறை பாலைக் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இதனால் நாளடைவில் நல்ல மாற்றம் தெரியும்.
எண்ணெய்கள் நல்ல வெதுவெதுப்பான தேங்காய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டும் கூந்தல் வறட்சியைப் போக்கலாம். அதற்கு அந்த எண்ணெய்களை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து அலசினால், கூந்தல் வறட்சி நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.
முடியை இறுக்கமாக கட்ட வேண்டாம் தலைக்கு குளித்தப் பின்னர் கூந்தலை இறுக்கமக கட்டாமல், கூந்தலில் உள்ள நீரை பிழிந்து வெளியேற்றி, அப்படியே உலர வைக்க வேண்டும்.


0 comments:
Post a Comment