Monday, 23 September 2013

சமந்தா கட்டுப்பாடு.. சித்தார்த் கடுப்பு...


சமந்தா விதித்துள்ள கட்டுப்பாடுகளால் சித்தார்த் கடுப்பாகியுள்ளாராம். Ôபாய்ஸ்Õ படத்தில் நடித்து சில மாதங்களிலேயே திருமணம் செய்துகொண்டார் சித்தார்த்.

அவரது திருமண வாழ¢க்கை தோல்வியில் முடிந்தது. பாலிவுட்டுக்கு சென்றபோது சைப் அலிகானின் தங்கை சோஹா அலிகானுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது.

இருவரும் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்து வந்தனர். திருமணம் வரை பேச்சு சென்றது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பின் ஸ்ருதிஹாசனுடன் சித்தார்த் நெருங்கினார்.

மீண்டும் லி.டு.கெ. ஆனால் திருமணம் வரை பேச்சு போகவில்லை. திடீரென இவர்கள் பிரிந்தனர். கடைசியாக சமந்தா. ஆனால் சமந்தா பல கண்டிஷன்கள் வைத்தாராம்.

அதற்கு சித்தார்த் ஓகே சொன்ன பிறகே அவரது காதலை சமந்தா ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதன்படியே இருவரும் இப்போது நடந்து வருகிறார்கள்.

ஆனால் அது சித்தார்த்தின் சித்தாந்தத்துக்கு எதிரானது என்பதால் அவருக்கு Ôபோர்Õ அடிக்க ஆரம்பித்துள்ளதாம்.

அந்த கண்டிஷன்களில் முக்கியமானது, செல்போன், மெயிலில் மட்டும் பேசிக்கொள்வது, அடிக்கடி நேரில் சந்திக்க கூடாது, வெளியிடங்களுக்கு ஒன்றாக போகக் கூடாது, காதலால் ஷூட்டிங்கிற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பது உள்பட...

இந்த கட்டுப்பாடுகளால் நொந்துபோன சித்தார்த் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளலாம் என சமந்தாவை கேட்டிருக்கிறாராம். சமந்தா தரப்பிலிருந்து பதில் இல்லையாம்.

0 comments:

Post a Comment