டெல்லியில் ஏடிஎம்-மிற்கு பணம் எடுத்துச்செல்லும் வாகன ஓட்டுனர் ஒருவர் வாகனத்தில் இருந்த 54 லட்சம் பணத்துடன் தப்பித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏடிஎம்-மிற்கு பணம் விநியோகிக்கும் கேஷ் மானேஜ்மென்ட் செர்விசெஸ் (Cash Management Services ) வாகன ஓட்டுனர், வண்டியிலிருந்த 54 லட்சம் ரூபாயுடன் தப்பித்து சென்றுள்ளார்.
1 கோடி ரூபாய் பணத்துடன் வாகனத்தை ஓட்டிச்சென்ற 30 வயது சஞ்சய், 46 லட்ச ரூபாயை பிற ஏடிஎம்-மில் அளித்துவிட்டு மீதமிருந்த பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.
இன்று காலை சுமார் 10.50 மணிக்கு நடந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார், உடனடியாக இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சஞ்சயை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


0 comments:
Post a Comment