Wednesday, 25 September 2013

தியேட்டரில் படம் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தவர் மரணம்



மும்பையில் திரையரங்கில் திரைப்படம் பார்த்து சிரித்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மும்பையில் கிராண்ட் மஸ்தி என்ற இந்தி திரைப்படத்தை பார்க்க மங்கேஷ் போகல் என்பவர் அவரது காதலியுடன் வந்திருந்தார்.

22 வயதான மங்கேஷ் போகல் திரைப்படத்தை பார்த்தப்போது, தன்னையே மறந்து தொடர்ச்சியாக சிரித்துள்ளார்.

இந்நிலையில், சிரித்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை வசாயில் உள்ள கார்டினல் கிராசியாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மங்கேஷை உடனடியாக பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சிரித்துக்கொண்டிருந்த மங்கேஷ் மரணம் அடைந்தது அவரது காதலி மற்றும் திரையரங்கில் இருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

0 comments:

Post a Comment