சீனாவில் வாஷிங்மெஷினில் தவறி விழுந்த 2 மற்றும் 4 வயது சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள ஜியாங்ஸி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். 2 மற்றும் 4 வயதான இச்சிறுமிகள் விளையாடுவதற்காக அவர்கள் வீட்டிலிருந்த வாஷிங்மெஷினிற்குள் இறங்க முயன்றுள்ளனர்.
இதற்காக வாஷிங்மெஷின் அருகே ஒரு நாற்காலியை போட்ட அச்சிறுமிகள் ஒருவர் பின் ஒருவராக அதற்குள் இறங்கியுள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக ஒரு சிறுமியின் கைப்பட்டு வாஷிங்மெஷின் இயங்க தொடங்க, உள்ளே இருந்த சிறுமிகள் காயம் ஏற்பட்டு பரிதாபமாக பலியானதாக தெரிகிறது.
குழந்தைகளை காணாமல் அனைத்து இடங்களிலும் தேடிய பெற்றோர், வாஷிங்மெஷின் இயங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அதனுள் பார்க்கும்போதுதான், ரத்த வெள்ளத்தில் குழந்தைகள் சடலமாக இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மக்கள், குழந்தைகள் வாஷிங்மெஷினிற்குள் விழுந்து பலியாக வாய்ப்பில்லை எனவும், எதற்காக சிறுமிகளின் பெற்றோர் உடனடியாக இறுதி சடங்குகளை செய்தனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமிகளின் 32 வயது தாய், என்னுடைய குழந்தைகளின் மரணத்திற்கு என்னால் எப்படி காரணமாக முடியும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment