Wednesday, 25 September 2013

யாருக்காக... இது யாருக்காக...


இப்படிதான் கோடம்பாக்கத்தில் சினிமா தொழிலாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். பத்து தின விடுமுறையில் நடக்கும் நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள 23 சினிமா சங்க நிர்வாகிகளில் சிலருக்கு மட்டுமே அழைப்பு கிடைத்தது.

உறுப்பினர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை. அவர்களில் பெரும்பாலோர் தினக்கூலி தொழிலாளர்கள். வேலை இல்லாமல் திண்டாடுகிறவர்கள். விழாவுக்கு பெரிய நட்சத்திரங்களுக்கு மட்டுமே அழைப்பு தரப்பட்டிருக்கிறது.

முக்கியமாக திரையுலகினருக்கு விருந்து என்று நட்சத்திர ஹோட்டலில் பிரபல நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே விருந்தளித்துள்ளனர். கோடியை தொடும் செலவு. சினிமா என்றால் வெறும் நடிகர்கள் மட்டும்தானா?

சினிமா தொழிலாளர்களுக்கு அதில் பங்கில்லையா? மக்களின் வரிப்பணத்தில்...

கோடிகளில் சம்பளம் வாங்குகிறவர்களுக்கு விருந்தளிக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தப் பணத்தில் தொழிலாளர்களுக்கு விருந்தளித்திருக்கலாமே? கேள்விகள்... கேள்விகள்...

நூற்றாண்டு விழா காரணமாக வேலையில்லாமல் சினிமா தொழிலாளர்கள் மம்மி உணவகத்தில் 3 ரூபாய் சாம்பார் சாதத்துக்கு முண்டியடிக்க, நட்சத்திரங்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் நட்சத்திர விடுதியில் விருந்து. என்ன கொடுமை இது நாராயணா?

0 comments:

Post a Comment