Wednesday, 25 September 2013

தோனியா, தவானா? சூப்பர் கிங்ஸ்-சன் ரைசர்ஸ் மோதல்!


நாளை (வியாழக்கிழமை) அபாரமான பார்மில் உள்ள தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் சொந்த மண்ணான ராஞ்சியில் தவான் தலைமை ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் அன்று டைட்டன்ஸ் அணி நிர்ணயித்த மிக கடினமான 185 ரன்கள் இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பவர் ஊதித் தள்ளியது.

இதனால் நாளையும்....

அந்த அணி பலமாகவே களமிறங்கும், சன் ரைசர்ஸ் அணிக்கு சரியான சவால் நாளை காத்திருக்கிறது.

ஆனால் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ள சன் ரைசர்ஸ் அணி பயிற்சியாளர் மோடியின் உற்சாகத்துடன் விளையாடுவதால் தோனிக்கும் வெற்றி அவ்வளவு சுலபமாகிவிடாது என்று கூறலாம்.

விஜய், ஹஸி, ரெய்னா, தோனி, டுபிளெசி, டிவைன் பிராவோ, ஆல்பி மோர்கெல் என்று சென்னை பேட்டிங் ஒரு மாட்டடி வரிசையைக் கொண்டுள்ளது. சன் ரைசர்ஸுக்கு பிரச்சனை என்னவெனில் கடந்த போட்டியில் விரைவில் ஆட்டமிழந்த தோனி நாளை நிச்சயம் ஒரு காட்டுக் காட்ட்வார் என்பதே.

சன் ரைசர்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சை எழும்ப விடாமல் அன்று டிவிலியர்ஸ் சாத்தியது போல் சாத்தி எடுத்து விடவேண்டும். அவரை செட்டில் ஆகவிட்டால் சன் ரைசர்ஸ் அணிக்கு நிச்சயம் தோல்வி உண்டாகும். பந்து வீச்சில் மோகித் சர்மா, ஜடேஜா, அஷ்வின், பிராவோ, மோர்கெல் என்று நல்ல வரிசை இருக்கிறது. ஆனால் அடித்து நொறுக்கினால் இவர்களுக்கு வெறு வகையில் பந்து வீசத் தெரியாது.

மாறாக சன் ரைசர்ஸ் அணியில் டேல் ஸ்டெய்ன், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் சிறப்பாகவே பந்து வீசுகின்றனர்.


0 comments:

Post a Comment