பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியை பூகம்பம் உலுக்கிய வேகத்தில் கடலில் புதிய குட்டித்தீவு ஒன்று தோன்றி உள்ளது. பாகிஸ்தானின் க்வாடர் கடலோரப் பகுதியில் இந்த தீவு உருவாகி இருக்கிறது.
சுமார் 60 மீட்டர் நீள அகலத்தில் தோன்றியுள்ள இந்த தீவின் மணல் பகுதி சுமார் 20- 30 மீட்டர் உயரத்துக்கு உயர்ந்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் இது போன்ற தீவு உருவாகி இருந்தது.
நாளடைவில் அந்த தீவு கடலில் கரைந்து காணாமல் போய்விட்டது. தற்போது பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் புதிய குட்டித்தீவு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கடலோரத்தில் திரண்டு அந்த புதிய குட்டித் தீவை பார்த்தனர். இந்த தீவு 100மீ சுற்றளவு கொண்டுள்ளது. கடற்கரையிலிருந்து ஒருமைல் தூரத்தில் இருப்பதால் இந்தத் தீவு கண்களுக்குத் தெரிந்தது.
இவ்வளவு பெரிய பூகம்பத்தின் விளைவாக இதுபோன்று குட்டித் தீவு தோன்றுவது ஒன்றும் ஆச்சரியமல்ல என்று ஜாகித் ரஃபி என்ற பூகம்ப ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார்.
ஆந்னால் அமெரிக்க பூகம்ப ஆய்வு மைய நிபுணர் கூறுகையில் பொதுவாக தீவு தோன்றுவது அரிதானதே, தீவு தோன்றும்போது பேரலைகள் எழும் என்று கூறியுள்ளார்.


0 comments:
Post a Comment