சினிமா நூற்றாண்டுவிழா நிகழ்ச்சிகளில் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனை சில நடிகைகள் மீறினர். குறிப்பாக நயன்தாரா மற்றும் ஸ்ரேயா. இரண்டு பேரும் விழாவில் நடனமாடுவார்கள் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடனமாடவில்லை என்பதுடன் விழாவுக்கே இவர்கள் இருவரும் வரவில்லை. அவர்களைப் போல விழாவுக்கு வராத முன்னணி நட்சத்திரங்களை பட்டியலிட்டு விளக்கம் கேட்க வேண்டும், தடை போட வேண்டும் என ஒரு குரூப் கொந்தளிக்கிறது.
சினிமா நூற்றாண்டு விழாவுக்கு சினிமாவில்...
பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அழைப்பில்லை. அதற்கு விழாக்குழுவால் எந்த பதிலும், விளக்கமும் தர இயலவில்லை. அப்படியிருக்க வராதவர்கள் என்று ஒருசிலரின் மீது மட்டும் எப்படி நடவடிக்கை எடுக்க இயலும்? தவிர இது தென்னிந்திய வர்த்தக சபை மாநில அரசு அளித்த தமிழக மக்களின் வரிப்பணத்தில் நடத்திய விழா. அதில் பங்கேற்காததற்கு ஒரு நடிகையை எப்படி தண்டிக்க முடியும்?
விழாவுக்கு வராதவர்கள் என்று எந்த நடிகைக்காவது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் அதைவிட கொடுமை இருக்க முடியாது.


0 comments:
Post a Comment