ஹன்சிகா, சிவ கார்த்திகேயன் நடிக்கும் மான் கராத்தே படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடக்கிறது. இதற்காக படயூனிட் கொடைக்கானல் சென்றுள்ளது.
மான் கராத்தேயின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். அவரது அசிஸ்டெண்ட் திருக்குமரன் படத்தை இயக்குகிறார். சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்தது. இரண்டு ஷெட்யூல்கள் முடிந்த நிலையில் கொடைக்கானலில் எட்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில் சினிமா நூற்றாண்டு விழாவுக்காக திரையுலகத்துக்கு பத்து தினங்கள் விடுமுறைவிட, கொடைக்கானல் பயணம் தடைபட்டது.
இன்றுமுதல் கொடைக்கானலில் மீண்டும் படப்பிடிப்பு நடக்கிறது. ஒரு பாடல் காட்சியும், வசனக் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 45 நாட்கள் பெங்களூருவில் படப்பிடிப்பு நடக்கிறது.
அடுத்த வருட தொடக்கத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.


0 comments:
Post a Comment