சூர்யா அடுத்து லிங்குசாமியின் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு, யுவன் ஷங்கர் ராஜா இசை, நா.முத்துக்குமார் பாடல்கள். ஹீரோயின் சமந்தா.
படத்தின் பெயர் ரவுடி என்று பல பத்திரிகைகள் எழுதின (இந்த விஷயத்தில் நாம் உஷார். எதுவும் எழுதவில்லை). சூர்யா படத்தின் பெயர் ரவுடியா? இருக்க வாய்ப்பில்லையே என்ற நினைத்தவேளை இயக்குனர் லிங்குசாமி ரவுடி பெயர் குறித்து விளக்கமளித்தார்.
இதுவரை படத்துக்கு பெயர் வைக்கவில்லை. சிலர் சொல்வது போல் ரவுடி எல்லாம் கிடையாது. படத்தின் பெயரை நானே அறிவிப்பேன் என தெரிவித்தார்.


0 comments:
Post a Comment