மேட்டுப்பாளையத்தில் கள்ளக்காதல் பிரச்சனையில் இளம்பெண்ணை காரில் கடத்தியவர்களை பொதுமக்கள் சேசிங் செய்யும் போது கார் விபத்துக்குள்ளானது.
மேட்டுப்பாளையம் சிவரஞ்சனி தியேட்டர் பின்புறமுள்ள பகுதியில் வசித்து வருபவர் பாலச்சந்திரன். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவிக்கு வயது 27. இவர்களுக்கு அஸ்வினி (7), ஸ்நேகா (6) என்ற பெண் 2 குழந்தைகள் உள்ளனர்.
அந்த இளப்பெண் காரமடையில் உள்ள துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு பிரதீபா என்ற பெண் பெட்டதாபுரத்தை சேர்ந்த சதீஸ் என்பவரின் செல்போன் எண்ணை கொடுத்து அவரிடம் பேச வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அப்பெண் மறுத்துள்ளார். பின்னர் அப்பெண்ணும் சதீசும் அடிக்கடி போனில் பேசினர்.
வேலை முடிந்து தினமும் 8 மணிக்கு துணிக்கடை அருகே சதீஸ் நிற்பார். இருவரும் பேசி வந்தனர். நாளடைவில் சதீஸ் அப்பெண்ணிடம் உனது குடும்பத்தை விட்டு வா. நாம் திருமணம் செய்துகொள்ளோம் என்று வற்புறுத்தினார். வர மறுத்தால் நீ என்னிடம் பேசுவதை உனது கணவரிடம் கூறிவிடுவேன் எனறும் மிரட்டினார்.
இந்த விபரம் துணிக்கடை உரிமையாளருக்கு தெரியவந்தது. இதனால் அப்பெண்ணை வேலையை விட்டு நீக்கினார். சில நாட்கள் கழிந்து சதீஸ் அப்பெண்ணை வேறு கடைக்கு வேலைக்கு சேர்த்துவிட்டார். உதவி செய்வதுபோல் செய்து மீண்டும் போனில் தொந்தரவு கொடுத்தார். இதனால் வெறுத்து போன அப்பெண் கடந்த 2 நாட்களாக செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார்.
மீண்டும் செல்போனை ஆன் செய்தபோது புதிய எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்து அப்பெண் பேசினார். அதில் நான் சதீசின் நண்பர் கார்த்திக் பேசுகிறேன். இனிமேல் சதீஸ் உங்களுக்கு தொந்தரவு தரமாட்டார். இனி நீங்கள் பயப்படத் தேவையில்லை என்று கூறினார். மேலும் நீங்கள் தற்போது எங்கு உள்ளீர்கள் என்று கேட்டார்.
அதற்கு அப்பெண் மேட்டுப்பாளையம் தாயனூரில் உள்ள தாய் வீட்டுக்கு செல்ல பஸ்சில் சென்று கொண்டிருப்பதாக கூறினார். மாலை 3 மணிக்கு அப்பெண் தாயனூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது அங்கிருந்த பொதுகுடிநீர் குழாய் அருகே ஒரு கார் நின்றது. அதில் சதீசும், கார்த்திக்கும் இருந்தனர்.
அப்பெண்ணிடம் வந்த சதீஸ் உன்னிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. என்னிடம் நீ பேசவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். ஆனால் அப்பெண் பதில் எதுவும் கூறவில்லை. சரி பேசாவிட்டாலும் பரவாயில்லை. என் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் அப்பெண் கோபமடைந்து மறுத்தார்.
ஆத்திரமடைந்த சதீஸ் அப்பெண்ணை பின் இருக்கையில் குண்டுகட்டாக தூக்கிப்போட்டார். கார்த்திக் காரை வேகமாக ஓட்டினார். சுதா சத்தம் போட்டு அலறினார்.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் பின்னால் வந்த வாகனத்தின் உதவியுடன் அப்பெண்ணை கடத்திச்சென்ற காரை பின் தொடர்ந்தனர். இது குறித்து காரமடை போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். பொதுமக்களும்- போலீசும் பெண்ணை கடத்தி சென்ற காரை விரட்டினர்.
கார் கணுவாய்பாளையம் அருகே சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பெண்ணை கடத்திச்சென்ற கார் எதிரே வந்த மினி டெம்போ மீது மோதியது. இந்த விபத்தில் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பெண் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தார். சதீசும், கார்த்திக்கும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பெண்ணை மீட்ட பொதுமக்கள்-போலீசார் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேட்டுப் பாளையம் இன்ஸ்பெக்டர் வீரபாண்டி, சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து பெண்ணை காரில் கடத்தி சென்ற சதீஸ் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை வலை வீசி தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் இந்து துணிகர சம்பவத்தால் தாயனூர்- மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


0 comments:
Post a Comment