Saturday, 21 September 2013

யுகே.யில் அசத்தும் சிவகார்த்திகேயனின் வாலிபர் சங்கம்!


பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படங்கள் மட்டுமே யுகே யில் வெளியிடப்படும். சிவ கார்த்திகேயனின் படத்துக்கும் இப்போது அந்த அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

சிவ கார்த்திகேயன், சூரி, சத்யராஜ;, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவ கார்த்திகேயனின் மாஸுக்காக யுகே யில் வெளியிடப்பட்டிருக்கிறது.
முதல் வார இறுதியில் இப்படம் பத்து திரையிடல்களில் 17,311 பவுண்ட்களை வசூலித்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 17.33 லட்சங்கள்.

இந்த வசூல் சிவ கார்த்திகேயனின் பெயருக்காக கிடைத்தது என்ற வகையில் டீசன்டான வசூல்தான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் தமிழகத்தில் பிரமாதமான வசூலுடன் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment