தேவையானவை:
கோதுமை ரவை – அரை கப்,
கோதுமை மாவு – அரை கப்,
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
புதினா – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
• பச்சை மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமை ரவையில் கொதிக்கும் தண்ணீர் விட்டு அதில் இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, கோதுமை மாவு, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
• இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.


0 comments:
Post a Comment