அவர்கள் என்றால் தனுஷ், ஐஸ்வர்யா. மனைவிக்காக அவரின் முதல் படம் 3 ல் தனுஷ் நடித்தார். படம் வெளிவரும் முன்பே இருவரும் பரஸ்பர ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டனர். இனி ஐஸ்வர்யா தனுஷை இயக்குவதில்லை.
இவர்கள் அப்படியே உல்டா. உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகாவின் முதல் படம் வணக்கம் சென்னை. கணவர் நடிகராக இருந்தும் முதல் படத்தில் மிர்ச்சி சிவாவை நாயகனாக்கினார். ஹீரோயின் ப்ரியா ஆனந்த். சந்தானம் காமெடி ஏரியாவை கவனிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 11 படத்தை வெளியிடும் வேலைகள் நடக்கின்றன.
முதல் படம் முடிந்த நிலையில் அடுத்தப் படத்தை தனது கணவரை வைத்து இயக்க விரும்புகிறாராம் கிருத்திகா. உதயநிதிக்கும் அது ஓகே தானாம். தற்போது அவர் நடித்து வரும் இது கதிர்வேலன் காதல் முடியும் நிலையில் உள்ளது. அதையடுத்து நண்பேன்டா. இரண்டும் முடிந்த பிறகு கிருத்திகாவின் இயக்கத்தில் நடிப்பார் என்கிறார்கள்.


0 comments:
Post a Comment