பெயரில் திருப்பதி இருப்பதாலா தெரியவில்லை. திகட்ட திகட்ட திருப்தி வரும்வரை சம்பளம் தருகிறார்கள். நிறுவனத்தின் முதலாளி முன்னணி இயக்குனராக இருந்தாலும் சம்பள விஷயத்தில் படு தாராளத்தை இந்த சகோதரர்கள் கடைபிடிக்கிறார்கள்.
சமீபத்தில் சங்கம் வைத்து வெற்றி பெற்ற ஹீரோவும், இயக்குனரும் இவர்களின் தயாரிப்புக்காக ஒரு படம் பண்ணுகிறார்கள். இயக்குனருக்கு 75 லட்சங்களும், ஹீரோவுக்கு 5 கோடியும் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இரண்டாவது படத்தில் இப்படியொரு சம்பளம் ஒரு இயக்குனருக்கு கிடைப்பது அரிது.
அதேபோல் சங்கத்துக்கு இரண்டுக்கும் குறைவாகதான் சம்பளம் வாங்கினார் ஹீரோ. இப்போது ஐந்தாக அது உயர்ந்திருக்கிறது. இப்படியே உயர்த்தி எட்ட முடியாத உயரத்தில் நீங்களே வச்சுகிட்டா எப்படி திரையுலகம் செழிக்கும் பிரதர்?


0 comments:
Post a Comment