Saturday, 1 February 2014

மணிரத்னம் படம் - புதிய யூகங்கள்



புதிய தகவல்கள் என்று மணிரத்னம் படத்தைக் குறித்து எழுத நமக்கும் ஆசைதான். அதற்கான சந்தர்ப்பத்தை மணிரத்னம் ஒருபோதும் உருவாக்குவதில்லை. தவிர்க்க முடியாத நேரத்தில் அவரின் படம் குறித்த செய்தி கவிப்பேரரசின் வாயிலாக வெளிவரும். இந்தமுறை அவரும் கப்சிப்.

மணிரத்னம் படத்தைக் குறித்த புதிய யூகங்கள் இவை.

மணிரத்னம் தனது புதிய படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இயக்குகிறார். மகேஷ்பாபு ஹீரோ. நாகார்ஜுன், ஃபஹத் ஃபாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஹீரோயினாக நடிக்க ஸ்ருதிஹாசனை அணுகியிருக்கிறார்கள்.

இந்த ஸ்கிரிப்டை அவர் ஐஸ்வர்யா ராயிடம் தந்ததாகவும், அதில் ஐஸ்வர்யா ராய்க்காக மணிரத்னம் உருவாக்கிய கதாபாத்திரம் அவரை மிகவும் கவர்ந்ததாகவும், ஐஸ்வர்யா ராயின் ரீ என்ட்ரியாக இந்தப் படம் இருக்கும் எனவும் யூகங்கள் தொடர்கின்றன.

இன்னும் சில தினங்களில் யூகங்கள் தகவல்களாக மாற வாய்ப்புள்ளது.

0 comments:

Post a Comment