Saturday, 1 February 2014

'எதாயிருந்தாலும் 'பிளான்' பண்ணிச் செய்யணும்'



இந்திய பேட்டிங்கும் சாயம் வெளுத்தது பற்றி நாம் குறிப்பிட்டிருந்தோம், செய்தியாளர்களும் தோனியிடம் அதைப்பற்றி கேட்டபோது இப்போது அணியில் இருக்கும் பேட்ஸ்மென்கள் மீது நிறைய முதலீடு செய்துள்ளோம், செட்டில் ஆன பேட்டிங் லைன் அப் மீது எத்ரனியினர் பாய்வார்கள், இப்போது இந்தக் காலக்கட்டத்தில் இருக்கிறொம். என்கிறார் தோனி.

கோலி, கேப்டன் தோனி தவிர ஒருவருக்கும் பந்து பேட்டில் படவில்லை. அப்படியே பட்டலும் அது அவுட் ஆவதாக உள்ளது. இல்லையேல் நின்று ஆடுகிறோம் என்று ஒரே அறுவை. இதிலிருந்து என்ன தெரிகிறது அந்தன்கப் போட்டிக்கான திட்ட வரயரை இல்லை என்பதே தெரிகிறது.

சரி.. தோனி என்ன கூறினார் என்று கேட்போம்:

"சர்வதேச கிரிக்கெட்டில் இந்தக் கட்டம் அனைவருக்கும் வருவதே. (இது ஒரு கட்டமாக இருந்தால் பரவாயில்லை. இதுவே கட்டமாக இருந்து கொண்டேயிருந்தால்). முதல் போட்டியை ஒருவர் ஆடி அது கிளிக் ஆகி தொடர்ந்து நன்றாக ஒரு வீரர் ஆடி வருகிறார் என்றால் பிறகு எதிரணியினர் அவரைக் குறிவைத்து விடுவர்.

இங்குதான் மோதல் வெடிக்கிறது. ஆனால் இது ஆரோக்கியமான மோதல். பிறகு எதிரணியினர் கொடுத்த பிரச்சனைகளை ஒருவர் தீர்த்துக் கொள்ளவேண்டும். எதிரணியினர் திட்டமிடுதல் செய்யவே செய்வார்கள். இதுதான் கிரிக்கெட், இது இப்போது இந்திய பேட்ஸ்மென்களுக்கு தொடங்கிவிட்டது.

இந்த சீசனின் துவக்கம் அபாரமாக இருந்தது. ஆனால் இப்போது பவுலர்கள் எங்கள் பேட்ஸ்மெனை குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். திட்டமிடுகல் செய்கின்றனர். ஆனால் பயிற்சியில் எதிரணியினர் கொடுக்கும் பிரச்சனைகளை வீரர்கள் களைய முனைய வேண்டும். இதிலிருந்து வெளியே வர சிறந்த தீர்வு எது என்பதை தேர்வு செய்வதுதான் முக்கியம். தனித் தனியாக சவால்களுக்கு தீர்வு கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.


இந்த பேட்ஸ்மென்கள் மீது நிறைய முதலீடு செய்திருக்கிறோம், நான் முதலிலேயே கூறியதுபோல் ஒரு செட்டில்டு அணியாக இருக்கும்போது அதனை எதிரணியினர் திட்டமிட்டு பிரச்சனைகளை ஏற்படுத்துவர் இதுதான் கிரிக்கெட், அந்த காலக்கட்டத்தில் தான் இப்போது இருக்கிறோம்.

இந்த பேட்ஸ்மென்களிடம் இதிலிருந்து வெளிவரும் திறமை உள்ளது. ஆனால் பயிற்சியில் இவர்கள் நிறைய முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். நிச்சயம் இவர்களிடம் உள்ள திறமைகள் இந்தச் சவால்களிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வரும்.

என்றார் தோனி.

சரி! எல்லோரும் திட்டமிடுகிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் தோனி. எதிரணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் திட்டம் ஏதேனும் உண்டா? இது கிரிக்கெட் ஆட்டத்தின் அடிப்படை, கேப்டன்சியின் அடிப்படை இது. இதை ஏதோ காலக்கட்டம் என்றெல்லாம் கூறி திசைதிருப்புதல் கூடாது.

0 comments:

Post a Comment