Saturday, 1 February 2014

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா...



சிவாஜியின் பாடலை மட்டும் பாடவில்லை. மற்றபடி அவரை மாதிரியே மயங்கிப் போயிருக்கிறது இது கதிர்வேலன் காதல் யூனிட்.

ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் இது கதிர்வேலன் காதல் ஃபெப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகிறது. ரிலீஸ் தேதி நெருங்கையில் படத்தைப் பற்றிய புதிய தகவல்களும் வெளியாகி ரசிகர்களை ஆர்வம் கொள்ள வைக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு பாவாடை தாவணியில் ஆடியிருக்கிறார் நயன்தாரா. வில்லு படத்தில் வாடா மாப்பிள்ளை பாடலுக்கு பாவாடை தாவணி போன்றதொரு உடையில் நயன்தாரா ஆடியது நினைவிருக்கலாம். அவரின் ஆட்டத்துக்காகவே அந்தப் பாடல் பலரின் பேவரைட் பாடலாக இன்றும் திகழ்கிறது.

இது கதிர்வேலனின் காதலில் பாவாடை தாவணியில் அவர் போட்ட ஆட்டத்தில் மெய் மறந்ததாம் மொத்த யூனிட்டும். படத்தின் பொpய ப்ளஸ்ஸhக இந்த தாவணியாட்டம் இருக்கும் என்கிறhர்கள்.

வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கும் சன்னி லியோனும் சிறிது நேரம் பாவாடை தாவணியில் வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment