Saturday, 1 February 2014

மது இயக்கத்தில் இனியா


அசின், அமலா பால், இனியா மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. மலையாளத்தில் துக்கடா வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர்கள் தமிழ், தெலுங்கில் பிரபலமான பிறகே மலையாளத்தில் ஸ்டாராக அங்கீகரிக்கப்பட்டார்கள். இவர்களின் கரியர் தொடங்கியது மலையாளத்தில் என்றாலும் அங்கு நடிகைக்குரிய அந்தஸ்தை பெற்றுத் தந்தது தமிழ்ப் படங்கள்.

இனியாவின் நிலைமை இன்றும் மலையாளத்தில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. முதல்முறையாக ஒரு பெரிய வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.

ஒரு சிபிஐ டைரி குறிப்பு மூலம் மலையாளத்தில் இன்வெஸ்டிக்கேட்டிங் த்ரில்லருக்கு அடித்தளமிட்டவர் இயக்குனர் மது. இந்தப் படத்தின் ஐந்து பாகங்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. ஐந்திலும் நாயகன் மம்முட்டி.

மதுவின் புதிய படத்தில் நடிக்க இனியா ஒப்பந்தமாகியிருக்கிறார். 2014 ல் இனியா மகிழ்ச்சி கொள்கிற நிகழ்வாக இருக்கிறது இந்தப் படம். வேறெhன்றுமில்லை... பார்க்கிறவர்களிடம் எல்லாம் மதுவின் இயக்கத்தில் நடிப்பதாக சொல்லி வருகிறார்.

0 comments:

Post a Comment