Saturday, 1 February 2014

எங்கள் பிராண்டு எப்போது மாறும் -அருண்பாண்டியன் கேள்வி



எங்கள் 'பிராண்டு' எப்போது மாறும் என்று தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. அருண் பாண்டியன் தமிழக சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

பேராவூரணி தொகுதி அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ. நடிகர் அருண் பாண்டியன் சட்டசபையில் கேட்ட கேள்வி வருமாறு:-

பேராவூரணியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக விரைவு பேருந்துகள் இயக்கப்படுமா?

அமைச்சர் செந்தில் பாலாஜி:- ஓலைக்குடிசையில் வாழும் ஏழைகளையும், முன்னேற்ற ஓயாமல் சிந்தித்து செயலாற்றும் முதலமைச்சர் அம்மா ஆட்சியில் கடந்த 2½ ஆண்டுகளில் 1,426 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் விடப்பட்டு மக்கள் சேவையாற்றி வருகிறது.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க பேராவூரணியில் இருந்து சென்னை வழித்தடத்தில் 1.9.2012 முதல் 242ஜி மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

நடிகர் அருண் பாண்டியன்:- எனக்கு அரசியல் அனுபவம் கம்மி. ஆனாலும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் 200 கேள்வி கேட்டாங்க. பதில் இல்லை என்கிறார்கள். ஆனால் நான் 10 கேள்வி கொடுத்தேன். 5 கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. எனவே இந்த அரசை பாராட்டாமல் எப்படி இருப்பது? தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க. அம்மா ஆட்சியை இந்தியாவே பாராட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நான் 6 மாதம் கழித்து பேருந்து விட கோரிக்கை வைத்திருந்தால் பேராவூரணியில் இருந்து டெல்லி வரை பேருந்து கிடைத்து இருக்கும்.

பாராளுமன்றத்துக்கு 534 ‘சீட்’ உள்ளது. ஆனால் கூட்டணி பற்றி பேசுபவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். தமிழ்நாட்டில் 40 சீட்டை ஏற்கனவே மக்கள் அம்மாவுக்கு என முடிவு செய்து விட்டார்கள்.

வருகிற தேர்தலுக்கு பிறகு இந்த ஆட்சிதான் டெல்லியில் இருக்கும். உங்களால்தான் (ஜெயலலிதா) நாங்கள் உருவாக்கப்பட்டோம். ஆனால் இப்போது நாங்கள் வேறு பிராண்டில் (தேமுதிகவில்) இருக்கிறோம். அது எப்போது மாறும் என்று அருண் பாண்டியன் கேள்வியெழுப்பினார்.

0 comments:

Post a Comment