சிவ கார்த்திகேயனுக்கு தம்பி அந்தஸ்து தந்து, எதிர்நீச்சல் படத்தை அவருக்காக தயாரித்து அதில் ஒரு ஆட்டமும் போட்டவர் தனுஷ். காலசக்கரம் கண்ணிமைப்பதற்குள் தனுஷைவிட உயரத்தில் சிவ கார்த்திகேயனை தூக்கி வைத்தது. அது விதியின் திருவிளையாடல்.
தனுஷ் படத்தில் ஒரு பாடலுக்கு சிவ கார்த்திகேயன் ஆடுகிறார் என்பது சமீபத்திய கிசுகிசு.
வேல்ராஜ் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தை தயாரித்து நடித்து வருகிறார் தனுஷ். பெயருக்குதான் வேல்ராஜ் ஷாட் வைப்பதும், ஸ்டார்ட் சொல்வதும் தனுஷ்தானாம். தெரியாம மாட்டிக்கிட்டோமே பரிதவிப்பில் வேல்ராஜ்
போகட்டும் அது நமக்கு தேவையில்லை. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு தனுஷுடன் அனிருத், சிவ கார்த்திகேயன் ஆடவிருக்கிறார்களாம். படத்துக்கு இசையும் அனிருத்தான்.
தனுஷ் கேட்டால் சிவ கார்த்திகேயன் மறுக்கவா போகிறார்?


0 comments:
Post a Comment