சரித்திர பேராசிரியர். இந்த புதிய பட்டத்தை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு வழங்கியவர் கார்த்திகா நாயர்.
புறம்போக்கு படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாமுடன் கார்த்திகா நாயரும் நடித்து வருகிறார். குலுமணாலியில் தொடங்கிய படப்பிடிப்பு ராஜஸ்தான், பீகார் என்று வடஇந்தியா முழுக்க நடக்கயிருக்கிறது.
கார்த்திகாவுக்கு இதில் போல்டான வேடம். சண்டையெல்லாம் போடுகிறார். டேப் டான்சும் இந்தப் படத்துக்காக புதிதாக கற்றிருக்கிறார். ஏஞ்சலினா ஜோலி நடிப்பில் வெளிவந்த லாரா கிராஃப்ட் படத்தின் சண்டைக் காட்சிகளை நினைவுப்படுத்துமாம் கார்த்திகா போடும் சண்டைகள்.
புறம்போக்கு வாய்ப்பை தந்ததற்காக ஏற்கனவே பலமுறை ஜனநாதனுக்கு நன்றி தெரிவித்தார். இப்போது அவருக்கு சரித்திர பேராசிரியர் என்ற பட்டமும் தந்திருக்கிறார் கார்த்திகா. வேறொன்றுமில்லை. அவரின் பொது அறிவை மெச்சி இப்படி அழைக்கிறார்.
யுடிவியுடன் இணைந்து ஜனநாதன் தனது பைனரி நிறுவனம் சார்பில் புறம்போக்கை தயாரிக்கிறார்.


0 comments:
Post a Comment