மும்பையில் சமையல் எரிவாயு சிலிண்டரை சோதனை செய்வதாக கூறி பெண் ஒருவரை இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மும்பையில் சமையல் எரிவாயு டெலிவரி வேலை பார்த்து வருபவர் சந்தன் ஜெய்வால். உத்தரபிரதேசத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன புதுமண தம்பதி ஒன்று மும்பை அருகே உள்ள அந்தேரி கிழக்கு பகுதியில் வசித்து வந்தனர்.
சமையல் எரிவாயு டெலிவரி செய்யும் சந்தன் ஜெய்வால் கணவன் வேலைக்கு சென்றதும் புதுமணப்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளதை நோட்டம் விட்டு வந்து உள்ளான்.
சம்பவத்தன்றும் கணவர் வேலைக்கு சென்றதும் புதுப்பெண் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். இதைபயன்படுத்தி கொண்ட சந்தன் தனது நண்பன் முகமது ஆலம் என்பவனையும் அழைத்துகொண்டு புதுப்பெண்ணின் வீட்டிற்கு சென்று சமையல் எரிவாயு சிலிண்டரை சோதனை செய்ய வேண்டும் என கூறி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளான்.
பின்னர் மயங்கிய நிலையில் இருந்த அப்பெண்ணிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிய குற்றவாளிகளை, பெண்ணின் புகாரின்பீரில் போலீசார் கைது செய்துள்ளனர்


0 comments:
Post a Comment