Saturday, 1 February 2014

நந்தாவின் கதம் கதம்



பாபா படத்தில் ரஜினி பிரபலப்படுத்திய பன்ச், கதம் கதம். முடிந்தது என்று இதற்கு அர்த்தம். நந்தா நடிக்கும் புதிய படத்துக்கு கதம் கதம் என்று பெயர் வைத்துள்ளனர்.

நந்தாவின் சினிமா கேரியர் உறுமிக் கொண்டிருக்கிறதே தவிர இன்னும் டேக்ஆஃப் ஆகவில்லை. அவரும் விதவிதமாக நடித்துத்தான் பார்க்கிறார். ஆனால் இந்த வருடம் ஏதாவது நடக்கும் போல் தெரிகிறது.

நந்தா நடிப்பில் புதிய திருப்பங்கள் என்ற படம் தயாராக உள்ளது. அதிதி படம் முடிவடையும் நிலையில். இப்போது புதிதாக கதம் கதம்.

இந்தப் படத்தில் நந்தாவுக்கு போலீஸ் அதிகாரி வேடம். போலீஸ்காரர்களுக்குள்ளே உள்ள மோதல்தான் படத்தின் கதை. தமிழுக்கு நிச்சயம் வித்தியாசமான ஸ்கிரிப்ட். ஹாலிவுட்டில் பல படங்களில் இந்த கதையம்சத்தை ஆழ உழுதிருக்கிறார்கள். (அதில் ஒன்றாக இப்படம் இருக்காது என்று நம்புவோம்).

பாபு தூயவன் படத்தை இயக்க, யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசை தாஜ் நூர்.

0 comments:

Post a Comment