ரஷியாவில் உள்ள ஆண்களில் நான்கில் ஒரு பங்கினர் தங்களது 55ஆவது வயதிற்குள் இறப்பதாகவும், அதற்கு முக்கியமான காரணம் வோட்கா எனப்படும் ரஷ்ய மதுபானம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
‘தி லான்செட்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வில், ஒன்றரை லட்சம் ஆண்கள் கடந்த பத்து ஆண்டுகளில் மது அருந்திய அளவு கண்காணிக்கப்பட்டது.
இவர்களில், அதில் அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்கள் மத்தியில், அதிக அளவில் அகால மரண விகிதங்கள் காணப்பட்டது.
இந்த இறப்புகளுக்கு, மது நச்சு, விபத்துகள், வன்முறை, தற்கொலை, மற்றும் தொண்டை மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் ஆகிய காரணங்களினால் மரணம் ஏற்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறப்பு விகிதங்கள் அரசியலில் மாற்றங்களினால் பாதிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ரஷியாவில் கம்யூனிச வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட ஸ்திரமற்ற நிலையினால் அதிகரித்த மதுப் பழக்கத்தினால் அதிகமான மக்கள் இறந்தனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.


0 comments:
Post a Comment