Saturday, 1 February 2014

Harley Davidson-ல் அமர்ந்தப்படியே புதைக்கப்பட்ட முதியவர்



அமெரிக்காவில் இறந்துபோன தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்ற அவரது பிள்ளைகள், அவரை அவருக்கு மிகவும் பிடித்த 'ஹார்லி டேவிட்சன்' பைக்கில் அமர்ந்தப்படியே புதைத்துள்ளனர்.

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம், மெக்கானிக்ஸ்னர்க் பகுதியை சேர்ந்தவர் பில் ஸ்டான்ட்லி. 82 வயதான இவர் கடந்த வாரம் உடல் நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார்.

சிறு வயது முதல் பைக்கள் மீது பிரியமாக இருந்தவர், காலப்போக்கில் பைக்குகள் மீது அதீத நாட்டம் கொண்டார்.

அதிவேகமாக செல்லும் மிக விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் என்ற மோட்டார் சைக்கிளை வாங்கிய அவர் அதை எப்போதும் நல்லவிதமாக பராமரித்து வந்தார்.

தனது பிள்ளைகளிடம் எப்போதும், தான் இறக்கும் போது பைக்கில் அமர்ந்து கொண்டிருந்தவாரே புதைக்க வேண்டும் என கூறிவந்த ஸ்டான்ட்லி, அதுதான் அவருடைய இறுதியான ஆசை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், ஸ்டான்ட்லி உயிரிழக்க, தந்தையின் ஆசையை நிறைவேற்றுவது என முடிவு செய்த அவரது பிள்ளைகள் அதற்காக அதிக பாரத்தை தாங்ககூடிய கண்ணாடி பேழையை தயார் செய்ததுடன், தாயாரின் சமாதிக்கு அருகே 3 கல்லறைகளுக்கான இடத்தை வாங்கினர்.

ஸ்டான்ட்லியின் உடலை 5 நிபுணர்கள் பதப்படுத்தி, அவரை அவருக்கு விருப்பமான 1967 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட 'ஹார்லி டேவிட்சன்' பைக்கில் அமரவைத்து கண்ணாடி பேழைக்குள் இறக்கினர்.

ரேஸ் வீரர்கள் அணிவதைப் போன்ற லெதர் ஜாக்கெட், ஹெல்மெட், கூலிங் கிளாஸ் சகிதமாக ஸ்டான்ட்லியை மோட்டார் சைக்கிளில் அமர வைத்து முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்று கல்லறையில் அவரது பிள்ளைகள் புதைத்தனர்.

0 comments:

Post a Comment