கொரில்லா பாஷை போல தோன்றும். ஆனால் இதுவொரு தமிழ்ப் பாட்டு. சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படத்தில் இந்த அருந்தமிழ் பாட்டு குடி கொண்டுள்ளது.
இயக்குனர் என்.ராஜேஷ்குமாருக்கு நாக்கில் சுளுக்கு வந்தது போல் பெயர் வைப்பதில் விருப்பம். அதுதான் இப்படியொரு பெயரை தேர்வு செய்திருக்கிறார். குக்குக்கு குக்கிக்கிச்சு என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். படத்தின் கதை முழுக்க ரயிலில் நடக்கிறது.
மிதுன், மிருதுளா நடித்திருக்கும் இந்தப் படத்தில் வில்லனாக அனூப் அரவிந்த். படத்தின் கதை பெயர் அளவுக்கு சிக்கல் இல்லை. சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு செல்லும் ரயலில் நாயகனும், நாயகியும் பயணிக்கிறார்கள். அந்த பயணத்தில் இருவருக்குள்ளும் ஏற்படும் ஈர்ப்பு படத்தில் பிரதானமாக வருகிறது.
விஜய் பெஞ்சமின் இசை. டி.ராஜேந்தரை பாட வைத்திருக்கிறார். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பாடலின் முதல் வரியைதான் நீங்கள் செய்தியின் தலைப்பில் பார்த்தது. ஸ்டாரோ மாரோ கிர் கிர்ருங்குது...
உங்களை கிர் கிர்ருங்க வைக்க இந்த மாதம் படம் வெளியாகிறது.


0 comments:
Post a Comment