Saturday, 1 February 2014

சவுதியில் இந்திய தொழிலாளர் தலை துண்டிப்பு



சவுதி அரேபியாவில் கொலை செய்த இந்திய தொழிலாளியின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதி அரேபியாவில் கற்பழிப்பு, கொலை, ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

அந்த வகையில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட இந்திய தொழிலாளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது பெயர் முகமது லத்தீப். இவர் தன்னுடன் பணிபுரிந்த டாபர் பின் முகமது அல்-துஸ்காரி என்பவரை குத்தி கொலை செய்தார். பின்னர் பிணத்தை ஒரு கிணற்றில் வீசி மறைத்தார். முகமது லத்தீப்புக்கு முகமது - அல் - துஸ்காரி வேலை வாங்கி தந்ததாகவும், அது குறித்து இருவருக்கும் பிரச்சினை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு தலை துண்டித்து நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சவுதி அரேபியாவில் லத்தீப்பையும் சேர்ந்து இந்த ஆண்டு இதுவரை 3 பேரின் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் 78 பேர் தலை துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment